கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம். தெருவியாபாரிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கைவிடவும், ஒப்பந்தகாரர் நியமிக்கப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தியும் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் தெருவோர வியாபாரிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது!!

கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம். தெருவியாபாரிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கைவிடவும், ஒப்பந்தகாரர் நியமிக்கப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தியும் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் தெருவோர வியாபாரிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது!!! தஞ்சாவூர் மாவட்ட தெருவோர வியாபாரிகள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் ஆர்.பி. முத்துக்குமரன் தலைமையில் இன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதல் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்::: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம் தெரு வியாபாரிகளிடம் கட்டணம் வசூலிப்பதற்காக ஒப்பந்தம் கோரப்பட்டு பல லட்சத்திற்கு ஒப்பந்தம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக வியாபாரிகளிடம் தின வாடகையாக பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வியாபாரத்தை முறைப்படுத்தவும், வியாபாரிகளின் வியாபாரத்தை பாதுகாக்கவும், தமிழ்நாடு 2015 சாலையோர வியாபாரிகள் சட்டம் 2 .11. 2015 முதல் தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிடப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது . இந்த சட்டத்தில் வியாபாரிகளுக்கு ஆண்டு கட்டணம், வியாபார தன்மை வியாபாரப் பகுதி, வியாபார முறை இவற்றை கணக்கில் கொண்டு கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதற்கு மேல் கட்டணம் வசூலிப்பதும், ஒப்பந்தப்புள்ளி விடுவதும் 2015 சாலை வியாபாரிகள் சட்டத்திற்கு எதிரானது ஆகும். எனவே கும்பகோணம் மாநகராட்சியில் கட்டண உயர்வை திரும்பப் பெறவும், ஒப்பந்த முறையை ரத்து செய்யவும் கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுஅளிக்கப்பட்ட நிகழ்வில் ஏஐடியூசி மாவட்ட துணை செயலாளர் துரை.மதிவாணன், தெரு வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் பி.சிவக்குமார், கும்பகோணம் பகுதி தலைவர் கே.பாலகிருஷ்ணன், மகாமக குளம் செயலாளர்பி. சரவணன் மற்றும் வணிக குழு உறுப்பினர்கள் கே. சாதிக் பாட்சா, வி.காமராஜ், லூ.சகாயராஜ் சென்று வந்தனர்.
