BREAKING NEWS

கும்பகோணம் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு படை போலீசார் அணிவகுப்பு.

கும்பகோணம் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு படை போலீசார் அணிவகுப்பு.

கும்பகோணம் ரயில் நிலையத்தில்
திருச்சி மண்டல ரயில்வே பாதுகாப்பு படை சீனியர் கமிஷனர் ராமகிருஷ்ணன் மற்றும் திருச்சி மண்டல
துணை கமிஷனர் சின்னதுரை உத்தரவின்பேரில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்
பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் நடக்கின்ற அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பாரத் பந்த் தடுக்கும் விதமாகவும் மற்றும் ரயில்வே சொத்துக்கும், ரயில்வே இடத்திற்கும் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக இந்த அணிவகுப்பு நடைபெற்றது.

முன்னதாக மயிலாடுதுறை
இன்ஸ்பெக்டர் சுதீர்குமார் மேற்பார்வையில்
உதவி ஆய்வாளர்கள்
மனோகரன் தலைமையில் லோகநாதன் மற்றும் விவேகானந்தன் மற்றும் திருச்சி ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை ஜவான்கள் மற்றும் கும்பகோணம் போலீசார்கள் ஆகியோர்கள் பொதுமக்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய வகையில் ரூட் மார்ச் என்ற அணிவகுப்பு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நடத்தினர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )