BREAKING NEWS

கும்பகோணம் வட்டார வள மையத்தில் இல்லம் தேடி கல்வி ஆய்வுக்கூட்டம்.

கும்பகோணம் வட்டார வள மையத்தில் இல்லம் தேடி கல்வி ஆய்வுக்கூட்டம்.

கும்பகோணம் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட, கும்பகோணம், திருப்பானந்தாள், திருவிடைமருதூர் மற்றும் பாபநாசம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்களின் ஆய்வுக்கூட்டம் கும்பகோணம் வட்டார வள மையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கும்பகோணம் கல்வி மாவட்ட இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் முருகன் தலைமை வகித்தார். கும்பகோணம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பூங்குழலி முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வா, தஞ்சாவூர் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர்.

 

இந்த ஆய்வுக் கூட்டத்தில் இல்லம் தேடி கல்வி மையங்களின் செயல்பாடுகள் குறித்தும், மையங்களை மேம்படுத்த ஆலோசனைகள் குறித்தும், மையங்களை நடத்துவதில் தன்னார்வலர்களுக்கு ஏற்படக்கூடிய இடர்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செல்வா, தஞ்சாவூர் மாவட்டத்தில் இல்லம் தேடிக் கல்வியை மிகச்சிறப்பாக கொண்டு செல்லும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தார். இல்லம் தேடி கல்வியில் தன்னார்வலர்களாக செயல்பட்டு வரும் அனைத்து தன்னார்வலர்களுக்கும் கூட்டத்தில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.

 

இக்கூட்டத்தில் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் விசுவநாதன், சிவதாஸ், இராஜா, மணிகண்டன், கண்ணதாசன், சீராளன், சிவராஜ், அமர்நாத் மற்றும் இல்லம் தேடிக் கல்விக்கு பொறுப்புடைய ஆசிரியர் பயிற்றுநர்கள் வெங்கடேஸ்வரி, செந்தில், மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் ஆய்வு கூட்டத்திற்கு பிறகு, திருப்பனந்தாள் ஒன்றியத்தில் உள்ள இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மையங்கள் சிறப்பாக நடைபெற ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் வழங்கினர். குறிப்பாக, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளும் சிறப்பாக பயன்பெறுகின்றனர் என்ற தன்னார்வலர்கள் அனைவரும், சிறப்பான திட்டத்தை அறிமுகம் செய்த தமிழக முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

மேலும் பார்வையிடப்பட்ட அனைத்து இல்லம் தேடி கல்வி மையங்களும் சிறப்பாக செயல்படுகிறது என்பதை பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாவட்ட இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பாராட்டினர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )