குறளறம் நூலாசிரியர் ந.இராஜகோபால் அவர்களுக்கு பாராட்டு.

திருநெல்வேலி மாநில தமிழ் சங்கத்தில் குரள்சித்தர் மேனாள் மாவட்ட பதிவாளர். ந. இராசகோபால் எழுதிய குறளறம் (திருக்குறள் அறத்துப்பால் உரை) நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது தமிழ் அறிஞர் பா. வளனரசு, புலவர் வை ராமசாமி, திருக்குறள் இரா. முருகன் முன்னிலையில் மருத்துவர் மகாலிங்க ஐயப்பன் வெளியிட கவிதாயினி ஜெயந்திமாலா பெற்றுக் கொண்டார்கள்.

நிகழ்வில் கவிஞர் கந்தன், கவிஞர் ராஜாராம் சுடலைமுத்து, முன்னாள் மாவட்ட பதிவாளர்.பி.பாஷ்யம்,புலவர்.இராம.வெங்கடாசலம் போன்ற தமிழறிஞர்கள் பல கலந்து கொண்டார்கள். நூலாசிரியர்.ந.ராஜகோபால் அவர்களை பாரதி முத்தமிழ் மன்ற செயலாளர் முனைவர் கவிஞர் கோ கணபதி சுப்பிரமணியன் துணைச் செயலாளர் கவிஞர்.சு.முத்துசாமி ஆகியோர் பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.
CATEGORIES திருநெல்வேலி
