BREAKING NEWS

குறுவை பயிருக்கான காப்பீடு குறித்த அறிவிப்பு அரசிடம் இருந்து ஒரு வாரத்திற்குள் வரும் என எதிர்பார்க்கிறோம் தஞ்சையில் வேளாண்மை இயக்குனர் அண்ணாதுரை பேட்டி.

குறுவை பயிருக்கான காப்பீடு குறித்த அறிவிப்பு அரசிடம் இருந்து ஒரு வாரத்திற்குள் வரும் என எதிர்பார்க்கிறோம் தஞ்சையில் வேளாண்மை இயக்குனர் அண்ணாதுரை பேட்டி.

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் இன்று குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் தஞ்சை மாவட்ட வேளாண்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. வேளாண்மை இயக்குனர் அண்ணாதுரை தலைமை நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் ஜஸ்டின் மற்றும் மாவட்டத்தில் இருந்து ஏராளமான விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் விவசாயிகள் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் மற்றும் வேளாண் தேவை குறித்து அதிகாரியிடம் தெரிவித்தனர். குறுவை பருவத்தில் தமிழ்நாடு அரசால் மாற்றுப்பயிராக 22 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உளுந்து, எண்ணைய் வித்துக்கள், சிறுதானிய விதைகள் வழங்கக்கூடிய திட்டங்கள் குறித்தும் எடுத்துச் சொல்லப்பட்டது. அதேபோல் விவசாயிகளுக்கு உரம் தட்டுப்பாடு இன்றி கிடைக்க மாநில அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்ட வருவதாகவும். இந்த ஆண்டு 5 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்ய அரசு எதிர்பார்த்துள்ளது.

ஆகவே அந்த அளவில் சாகுபடி செய்ய தேவையான ஏற்பாடு செய்து வருவதாக தெரிவித்தார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு உரங்கள் உள்ளதா என ஆய்வு செய்துள்ளேன். தமிழகத்தில் ஏறக்குறைய 65 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா இருக்கிறது. அதேபோல் டிஏபியும் தேவையான அளவு உள்ளது. உரங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க தேவையான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


குறுவை தொகுப்பு திட்டத்தில் இதுவரை 7 மாவட்டங்களில் 13 ஆயிரம் விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். 1600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அதற்கான ஆணைகளையும் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் குறுவை பயிர் காப்பீடு செய்வதற்காக அனைத்து மாவட்டங்களிலும் ஒப்பந்த பள்ளி பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசிற்கு ஒரு வாரத்திற்குள் அறிக்கை அனுப்பப்பட்டு ஒருவார காலத்திற்குள் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்‌ எனவும் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )