BREAKING NEWS

குறுவை பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க விவசாயிகள் கோரிக்கை

குறுவை பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க விவசாயிகள் கோரிக்கை

 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் அருக சேத்தூர் பகுதியில் குருவை காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

பெரம்பூர் அடுத்த சேத்தூர், வடகட்டளை, உக்கடை ஆகிய கிராமங்களில் விவசாயிகள் சுமார் 300 எக்டேர் பரப்பளவில் பயிர் சாகுபடி தொழில் செய்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் கடந்த 2021-22 ஆண்டுகளில் குறுவை சாகுபடி செய்திருந்தனர். தொடர் மழையால் தாழ்வான பகுதி என்பதால் பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தது.

 

 

பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்யப்பட்டும் இதுவரை பிரிமியம் தொகை வழங்காததால் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.

 

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் 2021-22 ஆண்டுகளில் பயிர் காப்பீடு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )