குறுவை பருவ நெல் கொள்முதலை செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்குவதாக உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற உணவு, உணவு பொருள் வழங்கல் துறை சார்பில் விவசாயிகள், அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்று குறுவை பருவத்துக்கான கொள்முதல் பணி அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் தேதிக்கு முன்பாகவே மே 24 ஆம் தேதி திறக்கப்பட்டதால், விவசாயிகள் சாகுபடிப் பணியை முன்கூட்டியே தொடங்கினர்.

எனவே, குறுவை பருவத்துக்கான நெல் கொள்முதல் பணியை செப்டம்பர் 1 ஆம் தேதியே தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதினார். இதை கோவைக்கு அண்மையில் வந்த ஒன்றிய நுகர்வோர் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் பியூஸ் கோயலிடம் வலியுறுத்தினோம்.

மத்திய அரசிடம் அனுமதி பெற்று செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் குறுவை பருவ நெல்லை கொள்முதல் செய்ய உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்ற அமைச்சர் திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளில் மழை பெய்தால் நெல் மூட்டைகள் நனைகின்றன. இதனால், இந்த ஆண்டு தமிழகத்தில் 5 லட்சம் டன்கள் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்கு கட்டுவதற்குத் தமிழக முதல்வர் அனுமதி அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 2021, அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நிகழாண்டு ஜூலை 12 ஆம் தேதி வரை 40.50 லட்சம் டன்கள் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 45 லட்சம் டன்கள் கொள்முதல் செய்யப்பட்டது. மேலும், விவசாயிகளுக்கு ரூ. 8,103 கோடி பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 46 லட்சம் முதல் 48 லட்சம் வரை நெல் கொள்முதலாக வாய்ப்புள்ளது என்றார்.

ரேஷன் கடைகளில் பாமாயில் என்னைக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் கடலை எண்ணெய் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் இதை முதல்வர் கவனத்திற்கு பரிந்துரை செய்யப்படும் முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் எனவும் அவர் உறுதி அளித்தார்.
