குற்றாலத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை.

தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் தற்போது ஐயப்ப சீசன் துவங்கியுள்ளதால் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் இங்கு வந்து அருவிகளில் புனித நீராடிவிட்டு குற்றாலநாதரை தரிசித்த பின்னர் ஐயப்பன் கோவிலுக்கு செல்வார்கள் அதேபோல் ஐயப்பன் கோவிலுக்கு சென்று விட்டு வரும் ஐயப்ப பக்தர்களும் இந்த வழியாக வருவதால் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் எப்போதுமே அதிகரித்து காணப்படும்.
ஐயப்ப பக்தர்களின் வருகையை ஒட்டி மூன்று மாதத்திற்கு குற்றலத்தில் உள்ள சுவாமி சன்னதி பஜார் பகுதிகளில் இருபுறமும் சிப்ஸ் கடைகள் அல்வா கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் இங்கே தரம் இல்லாத பொருட்களை பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோருக்கு புகார் வந்ததாக கூறப்படுகிறது.
இதை அடுத்து இன்று உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் முகம்மது முஹப் ரபின் , வெங்கடேஷ், ஆகியோர் கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அதிகரிகளின் சோதனையில் சிப்ஸ் மற்றும் அல்வா விற்பனை செய்யப்படும் நிலையில் சிப்ஸ் தயாரிப்பதற்கு பாமாயில் தேங்காய் எண்ணெய் தரமான எண்ணெயில் தயாரிக்கப்பட்டு உள்ளதா? பேக்கிங் செய்யும் போது அதில் உற்பத்தி செய்யும் நாள், காலாவதியாகும் நாள், உள்ளிட்டவைகளையும்,உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் தரச் சான்றிதழ் பெற்றுள்ளனரா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.
மேலும் பயன்படுத்தப்படும் எண்ணெய் களை அளவுக்கு அதிகமாக மாற்றி மாறி சுழற்சி முறையில் பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தியதோடு தரமான எண்ணெய்களை கொண்டு தயாரிக்க வேண்டும் எனவும் கடை உரிமையாளர்களிடம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
தொடர்ந்து திருநெல்வேலி ஒரிஜினல் நெய் அல்வா என பெயரிட்ட கடைகளில் ஆய்வு செய்து அங்கிருந்தும் சோதனைக்காக அல்வா மற்றும் சிப்ஸ்களையும்,மூலிகை எண்ணெய் கடைகளிலும் ஆய்வு செய்த அதிகாரிகள் சோதனைக்காக பொருட்களை எடுத்துச் சென்றனர்.
தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மூன்று மாதங்களில் வருகை தர உள்ள நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனையால் கடை உரிமையாளர்கள் கலங்கிப் போய் நின்றனர்.
மேலும் தரமான பொருள்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும் எனவும் அப்போது அறிவுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
அரசு நடைமுறைகளை கடைபிடிக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்..
