குற்றாலத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதி வழங்கப்படுகிறது

குற்றாலத்தில் உள்ள பழைய குற்றால அருவியில் 24 மணி நேரமும் குளிக்க அனுமதி இருந்த நிலையில் கொரோனா தளர்வுக்கு பின்னர் தற்போது காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதி வழங்கப்படுகிறது மாலை நேர தடையை நீக்கி 24 மணி நேர குளிக்க அனுமதிக்க கோரி ஊர் மக்கள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜீன் ஜீலை ஆகஸ்டு ஆகிய மூன்று மாதங்கள் மட்டுமே சீசன் காலம் இந்த 3 மாதத்தை வைத்தே இங்குள்ள வியாபாரிகள் மற்றும் ஊராட்சிக்கான வருமானம் நிர்ணயம் செய்யபப்டுகிறது குற்றாலத்தில் உள்ள பிரதான அருவி, ஐந்தருவி இரண்டு அருவிகளும் குற்றால பேரூராட்சி பகுதியில் உள்ளது ஆனால் பழைய குற்றாலம் அருவி மட்டும் ஆயிரப்பேரி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ளது இந்த ஊராட்சியின் மிக முக்கிய வருமானத்தில் பங்காக இந்த அருவிப்பகுதி உள்ள நிலையில் இங்கு கொரோனா தடைக்கு பின்னர் 24 மணி நேரமும் குளிக்க பிரதான அருவி மற்றும் ஐந்தருவி என அனைத்து அருவியிலும் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பழைய குற்றால அருவியில் மட்டும் குளிக்க காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது இதனால் இங்குள்ள வியாபாரிகள் ஊர் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர்மேலும் இரவு நேரம் முக்கிய பிரமுகர்கள் வந்து குளித்துசெல்ல மட்டும் மறைமுகமாக அனுமதிக்கப்படுவதாக புகார்கள் வருகிறது.
வர்த்தக ரீதியான இந்த பாதிப்பை சரி செய்யவும் சுற்றுலா பயணிகள் 24 மணி நேரமும் குளிக்க அனுமதிக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் 40 க்கும் மேற்பட்டோர் குவிந்து மனு அளித்தனர்.
