BREAKING NEWS

குற்றாலம் அருவியிலும், திற்பரப்பு அருவியிலும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

குற்றாலம் அருவியிலும், திற்பரப்பு அருவியிலும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கொட்டும் திற்பரப்பு அருவி; பயணிகள் மகிழ்ச்சி | The stream of water is  pushing

குற்றாலம் அருவியிலும், திற்பரப்பு அருவியிலும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. விடுமுறை நாள் என்பதால் அந்த அருவிகளில் குளிக்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அணைப் பகுதிகளிலும், பிற இடங்களிலும் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. அதனால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும், நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதனையடுத்து அங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. விடுமுறை நாட்களான நேற்றும் இன்றும் குற்றாலத்தில் குளிக்க கூட்டம் குவிந்தது. மெயின் அருவி, ஐந்தருவி உட்பட அனைத்து அருவிகளிலும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

திற்பரப்பு அருவி - பசுமை இந்தியா

அதேபோல குமரி மாவட்டத்தில் ஒரு வாரகாலமாகப் பெய்துவரும் கனமழை காரணமாக, மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. இதனால், ‘குமரிக் குற்றாலம்’ என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவிக்குச் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளை நம்பி வியாபாரம் செய்யும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )