BREAKING NEWS

கேரள மாநிலம் சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஆலயத்தில் நாளை நடைபெற உள்ள மாசி மக திருவிழாவுக்கு நிலக்கோட்டையில் இருந்து மூன்று டன் மலர்கள் மாலையாக தொடுத்து அனுப்பி வைக்கப்பட்டது.

கேரள மாநிலம் சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஆலயத்தில் நாளை நடைபெற உள்ள மாசி மக திருவிழாவுக்கு நிலக்கோட்டையில் இருந்து மூன்று டன் மலர்கள் மாலையாக தொடுத்து அனுப்பி வைக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் இருந்து பக்தர் ஒருவரால் கேரள மாநிலம் சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஆலயத்திற்கு மாசி மக திருவிழாவை யொட்டி 3 டன் மலர்கள் மலாலையாக தொடுக்கப்பட்டு காணிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டது.

 

கேரள மாநிலம் சோட்டானிக்கரையில் பகவதி அம்மன் பக்தர்களுக்கு காட்சி தந்த நாளாக கருதப்படும் மாசி மக திருநாள் திருவிழா நாளை நடைபெறுகிறது.

இந்த விழாவிற்கு ஆலயத்தை முழுவதும் மலர்களால் அலங்கரிக்கும் விதமாக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த சுகந்தா கரிகால பாண்டியன் என்ற பக்தர் மூன்று டன் வண்ண மலர்களை பூக்கட்டும் பணியாளர்கள் மூலம் மாலையாக தொடுத்து அதனை சோட்டானிக்கரை ஆலயத்திற்கு காணிக்கையாக அனுப்பி வைத்தார்.

 

ஆண்டுதோறும் சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஆலயத்திற்கு மாசி மகத்தை யொட்டி மலர்களை அனுப்பும் பணியில் சுகந்தா கரிகால பாண்டியன் ஈடுபட்டு வருகிறார்.

 

Share this…

CATEGORIES
TAGS