BREAKING NEWS

கைத்தறி நெசவாளர் அடையாள அட்டையில் சொல்லப்பட்டிருக்கிற நலத்திட்டங்களை தமிழில் வழங்க வேண்டும்; கைத்தறி நெசவாளர் சம்மேளன மாநில கூட்டத்தில் தீர்மானம்

கைத்தறி நெசவாளர் அடையாள அட்டையில் சொல்லப்பட்டிருக்கிற நலத்திட்டங்களை தமிழில் வழங்க வேண்டும்; கைத்தறி நெசவாளர் சம்மேளன மாநில கூட்டத்தில் தீர்மானம்

 

தஞ்சாவூர் மாவட்டம், கைத்தறி சம்மேளன மாநில குழு கூட்டம் கும்பகோணம் சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு சம்மேளன தலைவர் ஆர் சிங்காரவேல் தலைமை வகித்தார்.

 

செயலாளர் முத்துக்குமார் பொருளாளர் ஜீவா தஞ்சை மாவட்ட சிஐடியு மாவட்ட செயலாளர் சி. ஜெயபால் கைத்தறி சம்மேளன பொறுப்பாளர்கள் என்.பி நாகேந்திரன்,

 

எஸ்.ஜே.சுப்புராமன் கே.ஆர்.சந்திரன் உள்ளிட்ட கோவை மதுரை திருப்பூர் காஞ்சிபுரம் அரியலூர் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

 

கூட்டத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு மழை கால நிவாரணம் ஆண்டிற்கு ரூ.5000 வழங்க வேண்டும் பென்ஷன் காலதாமதம் இல்லாமல் மாதாமாதம் வழங்க வேண்டும் பென்ஷன் தொகை ரூபாய் 3000 உயர்த்தி வழங்க வேண்டும்.

 

 கைத்தறி நெசவாளர் அடையாள அட்டையில் சொல்லப்பட்டிருக்கிற அரசு நலத்திட்டங்களை தமிழில் மொழி பெயர்த்து உதவி இயக்குனர் அலுவலகத்தின் மூலம் நெசவாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

 

கைத்தறி நெசவாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட மகாத்மா காந்தி புங்கர் பீமா திட்டத்தின் கீழ் இறந்த பிறகு குடும்பத்திற்கு ஒரு லட்சம் உயர்த்தி தொடர்ந்து வணங்க வேண்டும்.

 

 கைத்தறிக்கு ஜிஎஸ்டி வரிகளை முழுமையாக நீக்கம் செய்ய வேண்டும் நெசவாளர் அனைவருக்கும் பயன்பெறும் வகையில் மருத்துவ காப்பீடு திட்டத்தை மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தப்பட வேண்டும்.

 

கைத்தறி சம்மேளன மாநில மாநாடு வருகிற 2023 மார்ச் மாதத்தில் காஞ்சிபுரத்தில் நடத்துவது எனவும் கன்னியாகுமரியில் நடைபெறும் சி ஐ டி யு மாநில மாநாட்டிற்கு அனைத்து நெசவாளர்களும் கலந்து கொள்வது  என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )