BREAKING NEWS

கொத்தங்குடி அருகே மின்டிரான்ஸ்பர்மர் பழுது குடிநீர் விநியோகம் தடை பொதுமக்கள் அவதி.

கொத்தங்குடி அருகே மின்டிரான்ஸ்பர்மர் பழுது குடிநீர் விநியோகம் தடை பொதுமக்கள் அவதி.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, கொத்தங்குடி அருகே உள்ள குண்டூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின்டிரான்ஸ்பர்மர் திடீரென பழுதானதால் குண்டூர் பகுதியில் மின்விநியோகம் தடை ஏற்பட்டது.

மின் டிரான்ஸ்பரமர் சரிசெய்யப்படாததால் குடிநீர் மோட்டார்கள் கடந்த 3 நாட்களாக இயங்காததால் கிராமமக்கள் குடிநீர் இன்றி அவதியுற்று வருகின்றனர். கிராமமக்களின் சிரமத்தை உணர்ந்து மின்வாரியத்தினர் உடனடியாக மின்மாற்றியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS