கொள்ளிடம் ஆற்றின் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த இளைஞர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து பாமக சார்பில் திருவிடைமருதூர் தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வன்னியர் சங்க அலுவலகத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட பாமக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மணிக்குடி அமிர்த.கண்ணன் தலைமை தாங்கினார்.
மாநில செயற்குழு உறுப்பினர்கள் கோதை. கேசவன், முருகன் உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர், கிழக்கு ஒன்றிய செயலாளர் அய்யப்பன் வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் ஜோதிராஜ் கலந்து கொண்டு பேசினார்.கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன;-
அரியலூர் மாவட்டத்திற்கு சோழன் பாசன திட்டத்தை அமல்படுத்தகோரி பிரச்சார எழுச்சி நடைபயணம் மேற்கொள்ளும் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்று அவரது எழுச்சி நடைபயணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட பாமக சார்பில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்,..
டெல்டா மாவட்டத்தில் யூரியா மற்றும் அடி உரம் தட்டுபாடு இல்லாமல் வழங்க வேண்டும்,சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு யூரியா வழங்குவதில் எந்த ஒரு நிபந்தனையும் இன்றி வழங்க மாவட்ட வேளாண்மைதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், பயிர்காப்பீடு தொகையை அரசு மறுபரிசீலனை செய்து கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
மதகுசாலை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த இளம் பட்டதாரி இளைஞர்களுக்கு நிவாரணமும் வழங்கவில்லை.
எனவே இதனை கண்டித்து பாமக சார்பில் திருவிடைமருதூர் தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பா.ம.க.இளைஞர் சங்க மாவட்ட செயலாளர் வினோத் சுந்தரம் , மாவட்ட துணைச்செயலாளர் சங்கர் பாமக , இளம்பெண்கள் சங்க மாவட்ட செயலாளர் சத்தியநாயகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.