கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வெளியேற்றம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தி உள்ளார்.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டுர் அணைக்கான நீர் வரத்து அதிகரித்ததை அடுத்து இன்று காலை மேட்டுர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் கன வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து முக்கொம்பு மற்றும் கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கொள்ளிடம் ஆற்றின் கரையோர பகுதி கிராமங்களான சுக்காம்பர்.
கோவிலடி, திருச் சென்னம் பூண்டி, பூண்டி, விஷ்ணம்பேட்டை, புதகிரி சாத்தனூர் மருவூர், வடுவகுடி, ஆச்சனூர் மற்றும் தஞ்சை மாவட்டம் எல்லையான அணைக்கரை வரையிலும் ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் தாழ்வான பகுதியில் இருந்து மேடான பகுதிக்கு பாதுகாப்பாக செல்லுமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, கை கால்கள் கழுவ வேண்டாம். கால்நடைகளை குளிப்பாட்ட வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் பொதுப்பணி துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் ஆற்றின் கரைகளின் பலம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
