கொள்ளிடம் ஆற்றில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி விவசாயிகள் அரசியல் கட்சியினர் மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொள்ளிடம் ஆற்றில் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் அரசு மணல் குவாரியில் நடக்கும் முறைகேடுகளை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் அரசியல் கட்சியினர் மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த மருதூர் கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே மணல் அள்ள வேண்டும் என்ற விதியை மீறி 24 மணி நேரமும் மணல் கொள்ளை நடப்பதாகவும் 80 லாரிக்கு பதிலாக 800 லாரிகளில் மணல் கொள்ளை அடிப்பதால்,


அந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விவசாயம் பாதிக்கப்படுவதோடு கொள்ளிடம் ஆற்றில் உள்ள கூட்டு குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்பட்டு 20 மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறி அப்பகுதி விவசாயிகள் தேமுதிக விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் 300க்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்து மணல் குவாரியை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


அரசு மணல் அருகில் நடக்கும் முறைகேடுகளை தமிழக முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து முறைகேடுகளை ஆய்வு செய்ய வேண்டும் இல்லை என்றால் மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்துள்ளனர்.
