கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில், மதகுசாலை கிராமத்தை சேர்ந்த மூன்று பட்டதாரி இளைஞர்கள் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும், தமிழக அரசு, தலா ரூபாய் 25 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கிடவும் கோரி திருப்பனந்தாள் ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பந்தநல்லூர் கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கும்பகோணம் அருகே பந்தநல்லூர் கடைவீதியில், திருப்பனந்தாள் ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், கடந்த மாதம் 18ம் தேதி, கரை புரண்டு ஓடிய கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில், எதிர்பாராவிதமாக சிக்கிய அடித்து செல்லப்பட்ட திருவிடைமருதூர் வட்டம், மதகுசாலை கிராமத்தை சேர்ந்த மனோஜ்குமார், ஆகாஷ் மற்றும் ராஜேஷ்குமார் மூன்று பட்டதாரி இளைஞர்கள், தீவிர தேடுதலுக்கு பிறகு, அடுத்தடுத்து மூவரும் சடலமாக மீட்கப்பட்டனர் இச்சம்பவம் மதகுசாலை கிராமத்தில் பெரும் சோகத்தினையும் அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மூவரின் குடும்பத்திற்கும் தமிழக அரசு, உடனடியாக தலா ரூபாய் 25 லட்சம் இழப்பீட்டு நிவாரணமாக வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கிடவும் முன்வர வேண்டும் என வலியுறுத்தி, கோரிக்கை முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்ட பாமக செயலாளர் ஜோதிராஜ் தலைமை வகித்தார், மாநில உழவர் பேரியக்க தலைவர் கோ ஆலயமணி முன்னிலையில், ஏராளமான பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
