கோக்கலை பகுதியில் காத்திருப்புப் போராட்டம் கை விடப்பட்டது
கோக்கலை பகுதியில் காத்திருப்புப் போராட்டம் கை விடப்பட்டது
திருச்செங்கோடு அருகே கோக்கலை பகுதியில் கல்குவாரி கிரசர்கள் சட்டத்துக்குப் புறம்பாக இயங்கி வருகின்றன என அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து ஓராண்டாகப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், வீடுகளுக்கும், குவாரிகளுக்கும் இடையேயான இடைவெளித் குறித்தான அளவீடுகளைச் செய்து தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்கள். 3 மாதங்களுக்கு முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி நில அளவீடுப் பணிகளையும் முடிக்கச் செய்தார்கள். இருப்பினும் 20 நாட்களுக்கு மேலாகியும் ஆவணங்கள் வழங்காமல் வருவாய்த் துறையினர் காலதாமதம் செய்ததால் நேற்று மாலை 4 மணி முதல் காத்திருப்புப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டார்கள். தகவல் அறிந்தக் காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் இமயவரம்பன் நடத்திய பேச்சு வார்த்தையில் வருவாய்த் துறைச் செய்த நில அளவீடு ஆவணங்கள் விவசாயிகளிடம் வழங்கப்பட்டது. நில அளவை ஆவணங்கள் கிடைக்கப் பெற்றதை அடுத்து விவசாயிகளின் காத்திருப்புப் போராட்டம் இரவு 11.30 மணி அளவில் கைவிடப்பட்டது.
மேலும் காத்திருப்புப் போராட்டம் செய்த 25 விவசாயிகள் மீது புகார் எழும் பட்சத்தில், வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.