BREAKING NEWS

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூரில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கினர்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூரில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கினர்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூரில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கினர்.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூரில் தமிழக முதல்வரின் காணொலி மூலம் நடைபெற்ற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

ஈரோடுமாவட்டத்தில் அனைத்து கிராமங்களில் உள்ள விவசாயிகள், சிறு குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றுதல், ஆழ்துளைகிணறு அமைத்து சொட்டு நீர் பாசனம் அமைத்தல், விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்குதல் என விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் இன்று தமிழக முதல்வர் காணொலி காட்சி வாயிலாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை ஈரோடுமாவட்டத்தில் 60கிராமங்களில் தொடங்கி வைத்தார்.

இதன் ஒருபகுதியாக கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் ஊராட்சியில் நடைபெற்ற முதல்வரின் காணொலி காட்சி நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண் துணை இயக்குனர் ஆசைதம்பி, கோபி வேளாண் உதவி இயக்குனர் ஜீவதயாளன், ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார், ஆத்மா திட்ட தலைவர் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து விவசாயிகளிடையே எடுத்துரைத்து அரசின் வேளாண் திட்டத்தை பயன்படுத்தி விவசாயிகள் சிறு குறு விவசாயிகள் பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஊராட்சியில் வேளாண் இடுபொருட்கள் வேண்டி விண்ணப்பித்திருந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மருந்து தெளிப்பான், தென்னங்கன்று, நேர்த்தி செய்யப்பட்ட விதைகள், காய்கறி விதைகள், மண்வெட்டி, மானிய விலையில் தார்பாய்கள் என வேளாண் இடுபொருட்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி கள்ளிப்பட்டி மணி ,கால்நடை பாரமரிப்பு இயக்குனர் விஷ்ணுகாந்த், ஊராட்சி மன்ற துணைதலைவர் கருப்புசாமி மற்றும் பொதுமக்கள் விவசாயிகள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )