கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூரில் அக்னிபாத் திட்டத்தை கண்டித்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூரில் அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்யகோரி ஆளும் மோடி அரசை கண்டித்து ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் எஸ்.வி.சரவணன் தலைமையில் நம்பியூர் நகர தலைவர் சதிஷ் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் வட்டார தலைவர்கள் நம்பியூர் வட்டார தலைவர் கே.பி.சண்முகசுந்தரம், என்.கே ஜவகர்பாபு, கோபி வட்டார தலைவர் இந்துஜா, செந்தில், கோபி நகர்மன்ற துணை தலைவர் தீபா, கோபி நகர தலைவர் மாரிமுத்து, மாநில பொதுகுழு உறுப்பினர் மனோகரன் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கோபி சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் மாநில செய்தி தொடர்பாளர் கே.எஸ்.கோதண்டன் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார் ஆர்ப்பாட்டதின்போது மத்திய அரசை கண்டித்தும் மோடியை பதவி விலக்கோரியும் கோஷங்களையும் முழக்கங்களை எழுப்பினர் ஆர்ப்பாட்டத்தில் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
