BREAKING NEWS

கோபிசெட்டிபாளையம் கல்லூரியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி பங்கேற்பு..

கோபிசெட்டிபாளையம் கல்லூரியில்  வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி பங்கேற்பு..

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் கலை அறிவியல் கல்லூரியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் நீர் பாசன நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் இரண்டு நாட்கள் நடைபெறும் இடைமுக பணிமனை கருத்தரங்கு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் எச்.கிருஷ்ணனுன்னி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

பின்னர் விவசாயிகளிடையே பேசிய மாவட்ட ஆட்சியர்..மாவட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் முக்கியத்துவம் குறித்தும் வேளாண் வணிகம் குறித்தும் சிறப்புரை நிகழ்த்தினார் மேலும் தமிழக அரசு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு வழங்கும் திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும் என விவசாயிகளிடையே சிறப்புரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் சண்முகசுந்தரம், வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி, தோட்டகலைதுறை துணை இயக்குனர் தமிழ்செல்வி, வேளாண்மை துணை இயக்குனர் ஆசைத்தம்பி, துல்லிய பண்ணைய உழவர் உழைப்பாளர் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் வடிவேலு, திட்ட ஒருங்கிணைப்பாளர் அழகேசன் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளிடையே வேளாண் உற்பத்தி பொருட்களை சந்தை படுத்துதல் குறித்து விளக்கவுரை நிகழ்த்தினார் நிகழ்ச்சி முடிவில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் பங்குதார்களுக்கு பங்கு சான்று வழங்கப்பட்டது.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )