கோபிசெட்டிபாளையம் பிரசித்தி பெற்ற பச்சமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர விழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்..

கோபிசெட்டிபாளையம் பிரசித்தி பெற்ற பச்சமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர விழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்..
கோபிசெட்டிபாளையத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பச்சமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்
அதே போல இந்த ஆண்டும் பங்குனி உத்திர தேர்திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக கடந்த 19 ம் தேதி கோயில் முன்புள்ள கொடிமரத்தில் சேவற்கொடி ஏற்றும் நிகழச்சி நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியையொட்டி முருகனுக்கு சிறப்பு வழிபாட்டு பூஜைகள் செய்யப்பட்டது,
அதன் தொடாந்து அடுத்தடுத்த தினங்களில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி முருகனுக்கு பாலபிஷேகம், சந்தன அபிஷேகம், திருநீர் அபிஷேகம், நெய் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் மாலை யாகசாலை பூஜையும், பூத வாகனத்தில் சுவாமி திருவீதி வலம் வருதலும், உள்ளிட்ட பூஜைகள் மற்றும் வழிபாடுகள் செய்யப்பட்டன,
இன்று முக்கிய நிகழ்வாக அலகு குத்தி ஊர்வலமாக செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் பெண் பக்தர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் முதுகில் அலகு குத்தி ஊர்வலமாக சென்று சுவாமிக்கு நேர்த்திக் கடனை செலுத்தினர்,
இந்த ஊர்வலம் ஆனது கோபி சீதா கல்யாண மண்டபத்தில் பாரியூர் சாலை, கோபி சிக்னல், புதுப்பாளையம் வழியாக கோவிலை அடைந்தது..
இந்த ஊர்வலத்தில் கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிநெடுகிலும் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்