BREAKING NEWS

கோலாகலமாக தொடங்கிய இயற்பியல் மன்ற விழா.

கோலாகலமாக தொடங்கிய இயற்பியல் மன்ற விழா.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் மன்ற துவக்க விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

 

 

மாணவர்கள் இயற்பியல் மாதிரி போன்றவைகளை காட்சி பொருளாக வைத்து காண்பித்தனர்.

 

 

மாணவர் வெங்கட்ரராகவன் வரவேற்புரை ஆற்றினார்.

 

தலைமையாசிரியர் முனைவர் திரு எஸ் எஸ் சோமசுந்தரம் அவர்கள் முன்னிலையில் வைத்தார்.

 

சிறப்பு விருந்தினராக முதுகலை பொருளாதார ஆசிரியர் திரு பொன்னுசாமி அவர்கள் கலந்து கொண்டு இயற்பியல் விஞ்ஞானிகள் மற்றும் அவர்களுடைய கண்டுபிடிப்புகள் குறித்து குறித்து மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார்.

 

மன்ற துவக்க விழாவை முன்னிட்டு வினாடி வினா போட்டி போன்றவை நடத்தப்பட்டது இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

 

மன்ற துவக்க விழாவினை முதுகலை இயற்பியல் ஆசிரியை திருமதி செல்வராணி அவர்கள் தொகுத்து வழங்கினார்.

 

மன்ற துவக்க விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியை திருமதி செல்வராணி மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )