கோவில்பட்டிக்கு வந்த ஒலிம்பியாட் ஜோதியை அமைச்சர் கீதா ஜீவன் வரவேற்றார்.

இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியார் போட்டிகள் ஜூலை 28-ம் தேதி முதல் ஆக.10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுவது குறித்து தமிழகம் முழுவதும் உள்ள மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு போட்டிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதையொட்டி செஸ் ஒலிம்பியாட் தீப ஒளி ஜோதி தமிழகம் முழுவதும் வலம் வருகிறது. இந்த தீப ஒளி ஜோதி தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்ற தீப ஒளி ஜோதி கோவில்பட்டி வந்தடைந்தது. தேசிய உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற தூத்துக்குடி கல்லூரி மாணவி சஹானா தீம் ஒளி ஜோதியை எடுத்து வந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனிடம் வழங்கினார்.
இந்த தீப ஒளி ஜோதி இங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டது. இதன் விழா கோவில்பட்டி கிருஷ்ணா நகர் செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் நடந்தது.
தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், சிலம்பாட்டம், மாதிரி சதுரங்க ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.