BREAKING NEWS

கோவில்பட்டியில் இருந்து மதுரைக்கு லோடு ஆட்டோவில் கடத்தவிருந்த 3 டன் ரேஷன் அரிசி வாகனம் பறிமுதல்_ டிரைவரை பிடித்து காவல்துறை விசாரணை.

கோவில்பட்டியில்  இருந்து மதுரைக்கு லோடு ஆட்டோவில் கடத்தவிருந்த 3 டன் ரேஷன் அரிசி வாகனம் பறிமுதல்_ டிரைவரை பிடித்து காவல்துறை விசாரணை.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் கோவில்பட்டி மேற்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது பல்லாக்கு ரோடு பகுதியைச் சார்ந்த ஓட்டுநர் தாமஸ் என்பவர் ரேஷன் அரிசியை கடத்தி கொண்டு செல்ல இருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து மேற்கு காவல் நிலைய போலீசார் அவரை பிடித்து 3 டன் ரேஷன் அரிசியுடன் வந்த லோடு ஆட்டோ வை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )