BREAKING NEWS

கோவில்பட்டியில் உள்ள நியாய விலை தரமற்ற கோதுமையில் சக்கைகள் அதிகமாக இருந்ததால் அதனை டிஎஸ்ஓ அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கோவில்பட்டியில் உள்ள நியாய விலை தரமற்ற கோதுமையில் சக்கைகள் அதிகமாக இருந்ததால் அதனை டிஎஸ்ஓ அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரை சேர்ந்தவர் கார்த்திக். வழக்கறிஞராக பணியாற்றி வரும் இவர் கதிரேசன் கோயில் சாலையில் உள்ள நியாய விலை கடை என் 26EDOO5PN கடையில் பொருட்கள் வாங்க சென்றார். அங்கு சர்க்கரை, கோதுமை, எண்ணெய், அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கி உள்ளார்.

 

நியாய விலை கடையில் உள்ள எடையாளர் கோதுமையை அளவீடு செய்தபோது, அதில் தூசிகளும் சக்கைகளும் அதிகமாக இருந்தன. இது குறித்து அவரிடம் கேட்டபோது எங்களுக்கு வருவதை நாங்கள் விநியோகம் செய்கிறோம் என கூறியுள்ளார்.

 

 

இதை எடுத்து கார்த்திக் நியாய விலை கடையில் வாங்கிய கோதுமையை எடுத்துக்கொண்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் பிரிவுக்கு சென்று அங்குள்ள மேதையில் கோதுமையை கொட்டினார். வட்ட வழங்கல் பிரிவு உதவியாளர் உடனடியாக சம்பந்தப்பட்ட நியாய விலை கடை அலுவலர்களை தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.

 

 

பின்னர் அங்கே வந்த வட்ட வழங்கல் அலுவலர் நாகராஜன் உடனடியாக கோதுமையை மாற்றி தர நடவடிக்கை எடுக்கிறேன் என கூறினார். மேலும் கதிரேசன் கோயில் சாலையில் உள்ள நியாய விலை கடை ஆய்வு செய்து அங்கு இருந்த கோதுமை மூட்டை மூடைக்கு பதிலாக வேறு மூட்டை வழங்கப்பட்டது. வழக்கறிஞர் கார்த்திக் வாங்கிய கோதுமைக்கு பதில் வேறு கோதுமை வழங்கப்பட்டது.

 

 

இது குறித்து வழக்கறிஞர் கார்த்திக் கூறுகையில், மூன்று மாதங்களுக்கு ஒரு முறையே கோதுமை வழங்கப்படுகிறது. அதுவும் முதலில் வரும் நூறு பேருக்கு தான் கிடைக்கிறது. அந்த கோதுமையும் மிகவும் மோசமாக இருந்தால் மக்கள் என்ன செய்வார்கள். ரேஷன் பொருட்கள் என்பது ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் அங்கமாக உள்ளது.

 

 

எனவே, நியாய விலை பொருட்கள் விநியோகத்தில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி தரமான பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர்,உணவு துறை அமைச்சர், கூட்டுறவுத்துறை அமைச்சர், மற்றும் அதிகாரிகள் ஒரு வார காலமாக அது நியாய விலைக் கடை பொருட்களை வாங்கி சமைத்து சாப்பிட்டு பாருங்கள் ஏழை எளிய மக்கள் எவ்வளவு தூரம் கஷ்டப்படுறாங்கன்னு அப்ப தெரியும் என கூறினார்.

 

CATEGORIES
TAGS