கோவில்பட்டியில் நடைபெறும் 12வது தேசிய ஆடவர் ஹாக்கி போட்டி.
கோவில்பட்டியில் நடைபெறும் 12வது தேசிய ஆடவர் ஹாக்கி போட்டி.
கோவில்பட்டியில் நடைபெறும் 12வது தேசிய ஆடவர் ஹாக்கி போட்டி :
7ம் நாள் ஆட்டத்தில் தமிழ்நாடு, ஜார்க்கண்ட் அணிகள் வெற்றி பெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல் வெளி மைதானத்தில் 12வது தேசிய ஜூனியர் ஆடவர் ஹாக்கி போட்டிகள் 17ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று 7 ம் நாள் நடைபெற்ற ஆட்டத்தில் G பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு – கோவா அணிகள் மோதியது.
இதில் 11- 0 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது. தமிழ்நாடு அணியின் சிறந்த ஆட்ட நாயகனாக சதீஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அடுத்து G பிரிவில் இடம் பெற்ற ஜார்க்கண்ட் – சட்டீஸ்கர் அணி மோதியது.
இதில் 6 – 2 என்ற கோல் கணக்கில் ஜார்கண்ட் அணி வெற்றி பெற்றது. சிறந்த ஆட்ட நாயகனாக பிரேம் கிரிக்கெட்டா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதில் ஜார்க்கண்ட் அணி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.