BREAKING NEWS

கோவில்பட்டியில் பிரதான சாலையில் அடுத்தடுத்து உள்ள மூன்று கோயிலில் உண்டியல் பூட்டை உடைத்து பணம் திருட்டு போலீசார் விசாரணை.

கோவில்பட்டியில் பிரதான சாலையில் அடுத்தடுத்து உள்ள மூன்று கோயிலில் உண்டியல் பூட்டை உடைத்து பணம் திருட்டு போலீசார் விசாரணை.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பிரதான சாலையான கதிரேசன் கோயில் சாலையில் உள்ளது மேட்டு காளியம்மன் கோயில், முத்து மாரியம்மன் கோயில், விநாயகர் கோயில் அடுத்தடுத்து இருந்த மூன்று கோயிலில் இரவு மர்ம நபர்கள் கோயிலில் வெளிபூட்டை உடைத்து கோயில் உள்ளே இருந்த உண்டியல் பூட்டையும் உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலையில் வந்த கோயில் பூசாரிகள் கோயில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதையும் உண்டியல் உடைக்கப் பட்டிருப்பது கண்டு அதிர்ச்சடைந்த பூசாரிகள் உடனடியாக கோவில்பட்டி மேற்கு காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர் பின்னர் மேற்கு காவல் துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறேன்.

மூன்று கோயிலின் உண்டியலில் பல லட்சம் ரூபாய் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் துறையினர் விசாரணை.

CATEGORIES
TAGS