BREAKING NEWS

கோவில்பட்டியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து கோவில்பட்டியில் காங்கிரஸார் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு வடக்கு மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஜோஷ்வா தலைமை வகித்தார். நகர காங்கிரஸ் தலைவர் கே.டி.பி.அருண்பாண்டியன், எஸ்.சி.எஸ்.டி. பிரிவு மாநில துணை தலைவர் மாரிமுத்து, மாவட்ட பொருளாளர் கார்த்திக் காமராஜ், மாவட்ட பொது செயலாளர் சண்முகராஜ், மாவட்ட செயலாளர் துரைராஜ், முன்னாள் மாவட்ட துணை தலைவர் வழக்கறிஞர் அய்யலுசாமி ஆகியோர் பேசினர்.

இதில், ஐஎன்டியுசி மாவட்ட பொது செயலாளர் ராஜசேகரன், நகர காங்கிரஸ் பொது செயலாளர் செம்புக்குட்டி, கிழக்கு வட்டார தலைவர் மரியசூசை ராஜ், நகர செயலாளர் ஆறுமுகம், சட்டமன்ற தொகுதி தலைவர் சுடலைமணி, வடக்கு மாவட்ட மாணவர் காங்கிரஸ் அமைப்பாளர் பிரபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சண்முகவேல், பிச்சைக்கனி, வழக்கறிஞர் மஹேந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு கோஷங்கள் முழங்கினர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )