கோவில்பட்டியில் ரயில்வே பாதுகாப்பு சாதனை விளக்க விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி வரவேற்பு.

75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு மதுரை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் இந்திய ரயில்வே மற்றும் பாதுகாப்பு படையின் சாதனைகளை விளக்கி விழிப்புணர்வு வாகன பேரணி மதுரை கோட்ட பாதுகாப்பு படை ஆணையர் அன்பரசு அவர்களின் மேற்பார்வையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு வருகை தந்த வாகன பேரணிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கோவில்பட்டி ரயில் நிலைய வளாகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பரதநாட்டின் 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு மதுரை கோட்ட ரயில்வே படையைச் சேர்ந்த 12-க்கும் மேற்பட்ட வீரர்கள் மதுரை கோட்ட சார்பு ஆய்வாளர் ஜார்ஜ் முல்லர் தலைமையில் இந்திய ரயில்வேயின் சாதனைகளை விளக்கி குறும்படம் காண்பிக்கப்பட்டு மதுரையில் இருந்து துவங்கி விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி வழியாக சென்னை சென்று அங்கிருந்து ஆகஸ்ட் 14ஆம் தேதி டெல்லி செல்கிறது.

கோவில்பட்டிக்கு வருகை தந்த வாகன பேரணி வரவேற்பு நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரயில் நிலைய சார்பு ஆய்வாளர் சந்திரன் தலைமை வகித்தார்.ரோட்டரி சங்க செயலாளர் மணிகண்ட மூர்த்தி,பொருளாளர் காளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கோவில்பட்டி ரயில் நிலைய பாதுகாப்பு படை காவலர் பார்த்தசாரதி அனைவரையும் வரவேற்றார்.
கோவில்பட்டிக்கு வருகை தந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கு சால்வை அனுவிக்கப்பட்டு பிரட் , குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன்,காஞ்சிபுரம் மாவட்ட நூலக ஆய்வாளர் (பணி நிறைவு)பூல்பாண்டி, ரோட்டரி சங்க நிர்வாகிகள் சீனிவாசன், முத்துச்செல்வன்,மாரியப்பன், முத்துமுருகன்,கருப்பசாமி,இளங்கோ, தாமோதர கண்ணன்.நாராயணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ரயில்வே பாதுகாப்பு படை உதவி சார்பு ஆய்வாளர் கணேசன் நன்றி கூறினார்.
