BREAKING NEWS

கோவில்பட்டியில் விவசாய சங்கம் சார்பில் விவசாய பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை ரத்து செய்யக்கோரியும் நிலுவையில் உள்ள பயிர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டியில் விவசாய சங்கம் சார்பில் விவசாய பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை ரத்து செய்யக்கோரியும்  நிலுவையில் உள்ள பயிர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள பயணியர் விடுதி முன்பு தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை ரத்து செய்யக் கோரியும் தூத்துக்குடி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள 2020- 21 காண மக்காச்சோளம், கரும்பு ,உளுந்து,பாசி மிளகாய்,வெங்காயம் போன்ற பயிர்களுக்கு பயிர்க் காப்பீட்டை காலதாமதம் இன்றி உடனே வழங்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உடனடியாக நிலுவையில் உள்ள பயிர் காப்பீடு தொகையை வழங்க கோரியும்,செஸ் வரியை ரத்து செய்ய கோரியும் கோஷங்களை எழுப்பினர் இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )