BREAKING NEWS

கோவில்பட்டியில் ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் 58. ஆம் ஆண்டு கொடை விழா.

கோவில்பட்டியில் ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் 58. ஆம் ஆண்டு கொடை விழா.

கோவில்பட்டியில் ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் 58. ஆம் ஆண்டு கொடை விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உள்ள வள்ளுவர் நகர் பகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமுதாய உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் 58. ஆம் ஆண்டு கொடை விழா மற்றும் பொங்கல் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. கடந்த 24 ஆம் தேதி அன்று நாட்டுகால் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று அன்னதன திருவிழா நடைபெற்றது.இவ்விழாவில் 24-வது வார்டு அதிமுக நகரமன்ற உறுப்பினர் செண்பகமூர்த்தி தலைமையில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பொதுமக்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நகர செயலாளர் விஜய பாண்டியன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, ஒன்றிய செயலாளர் அன்புராஜ், அம்மா பேரவை ஒன்றிய துனை செயலாளர் சாமிராஜ், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகரமன்ற உறுப்பினர் கவியரசன், நகர அம்மா பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, மாவட்ட பிரதிநிதி மகேஷ் பாலா,முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, கழகப் பேச்சாளர் பெருமாள் சாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன்,உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் முருகன், மனோகரன்,பழனிகுமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )