BREAKING NEWS

கோவில்பட்டி அருகே அகிலாண்டாரம் புனித ஞானபிரகாசியர் ஆலய திருவிழா

கோவில்பட்டி அருகே அகிலாண்டாரம் புனித ஞானபிரகாசியர் ஆலய திருவிழா.

கோவில்பட்டி அருகே அகிலாண்டாரம் புனித ஞானபிரகாசியர் ஆலய திருவிழாவில் முன்னாள் அமைச்சர்,கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தேர்பவனியை துவக்கிவைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அகிலாண்டபுரம் புனித ஞானப்பிரகாசியர் ஆலய திருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா 10-நாட்கள் நடந்தது. நவநாட்களில் மறையுரை சிந்தனை, அசனம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருவிழாவின் 10-ம் நாளில் தேரடியில் திருப்பலி நடந்தது. அதனைத் தொடர்ந்து தேர்பவனி நடைபெற்றது.

முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்,கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தேர்பவனியை துவக்கிவைத்தார். ஊரின்தெருக்களில் தேர் பவனியின் போது பக்தர்கள் உப்பு, மிளகு, மெழுவர்த்தி, பூ ஆகியனவற்றை காணிக்கையாக வழங்கினர். வேண்டுதல்க்காக கும்பிடுசிலுவை நடத்தினர். மதியம் அசன விருந்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் வண்டானம் கருப்பசாமி, வினோபாஜி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வக்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், அதிமுக நிர்வாகிகள் முருகன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை வின்சென்ட் தலைமையில் இறைமக்கள் செய்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )