கோவில்பட்டி அருகே அருள்மிகு டெல்லி பாலாஜி ரேணுகாதேவி அம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இ.சத்திரப்பட்டி அமைந்துள்ள அருள்மிகு டெல்லி பாலாஜி ரேணுகாதேவி அம்மன் திருக்கோவில் மகா பூரண கும்பாபிஷேக விழா 15ஆம் தேதி அன்று மகா கும்பாபிஷேகம் காப்பு கட்டுதல் கும்பத்தில் தீர்த்தத்தை நிரப்பப்பட்டு கோயில் வலம்வந்து யாகசாலையில் எழுந்தருள மற்றும் கோ பூஜை யாகசாலையில் தீர்த்துக் குடங்களுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருக்கோவில் 24.வது பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ சடகோய இராமானுஜ ஜீயர் சுவாமிகள் தலைமையில் இன்று திருக்கோயில் அதிகாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவைகள் நடைபெற்றன. மேளதாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருக்கோவில் பிரகாரம் வழியாக எடுத்து வந்து கோபுர கலசத்துக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மூலஸ்தானத்தில் 21 அபிஷேக சிறப்பு பூஜைகள், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட குழு தலைவி சத்யா, நகர செயலாளர் விஜய பாண்டியன்,ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிசாமி, எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனிராஜ், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், எட்டயபுரம் நகரக் கழகச் செயலாளர் ராஜகுமார், நகர அம்மா பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, நகரமன்ற உறுப்பினர் கவியரசன், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள், மாணவரணி துணை தலைவர் செல்வக்குமார் மகளிர் அணி செயலாளர் சுதா என்ற சுப்புலட்சுமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, மேலஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி முருகன், கோபி, மனோகரன்,பழனி குமார், பழனிமுருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.