BREAKING NEWS

கோவில்பட்டி அருகே கடம்பூர் பேரூராட்சியை முதன்முறையாக கைப்பற்றியது திமுக கூட்டணி.

கோவில்பட்டி அருகே கடம்பூர் பேரூராட்சியை முதன்முறையாக கைப்பற்றியது திமுக கூட்டணி.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடம்பூர் பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன் 12 வாரங்களில் 9 வார்டுகளுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

 

இதில் 64.69% வாக்குகள் பதிவாகின பதிவான வாக்குகள் கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

 

 

ஏற்கனவே 1,2, 11 ஆகிய 3 வார்டுகளுக்கு சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியின்றி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 9 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

 

 

தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் மொத்தம் 9 வார்டுகளில் திமுக திமுக கூட்டணி போட்டியிட்டது.

 

இதில் திமுக 6, மதிமுக 1,காங்கிரஸ் 1, சுயேட்சை ஒருவர் என கைப்பற்றி யுள்ளனர். கடம்பூர் பேரூராட்சியில் முதல் முறையாக திமுக போட்டியிட்டு தேர்தலை சந்தித்து கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )