கோவில்பட்டி அருகே காதல் விவகாரத்தில் நண்பனை நண்பர்களே கொலை செய்து கிணற்றில் வீசிய கொடூரம்- உடலை கைப்பற்றி காவல்துறை விசாரணை.

மதுரை எம்.எம்.காலனியை சேர்ந்தவர் முருகன் மகன் வெற்றிவேல்(19) கடந்த 5-ம் தேதி வெற்றிவேலை காணவில்லை என தாய் ராணி அவின்யாபுரத்திலுள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்குபதிவு விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த வெற்றிவேல் நண்பர்களான மாரியப்பன் மகன் அஜய் முருகன் (19) மற்றும் மலைச்சாமி மகன் மணிகண்டன்(19) ஆகியோர் அழைத்து சென்றது தெரிந்தது .

கடந்த 30 -ம் தேதி அஜய் முருகன் தனது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வெள்ளாளங்கோட்டை கிராமத்திற்க்கு வெற்றிவேலை தன் நண்பர் மணிகண்டனுடன் அழைத்து வந்து ஊருக்கு வெளியேயுள்ள காட்டுப்பகுதியில் பாழடைந்த கிணற்றுக்கு அருகில் வைத்து அரிவாளால் வெட்டி, கிணற்றுக்குள் தூக்கிவீசிவிட்டு சென்றது தெரியவந்தது.

இதனை அடுத்து நேற்று அவனியாபுரம் போலீசார் கொலையாளிகளை வெள்ளாளங்கோட்டை சம்பவ இடத்திற்க்கு அழைத்து வந்து, வெற்றிவேல் உடலை கிணற்றிலிருந்து வெளியே எடுத்தார். அஜயை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் தனது தங்கையை வெற்றிவேலின் நண்பர் காதலிக்க உதவியதாகவும் இதன் காரணமாகவே அவரை கடத்தி வந்து கொலை செய்ததாகவும் விசாரணையில் கூறப்படுகிறது மேலும் அவரது உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
