கோவில்பட்டி அருகே தனியாருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலையில் தீக்குச்சிகள் திடீரென்று தீ பல லட்சம் மதிப்பிலான தீக்குச்சிகள் எரிந்து சேதம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை சேர்ந்த செல்வத்துக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலை இயங்கி வருகிறது.

இந்நிலையில் இன்று காலை தீப்பெட்டி ஆலையில் ஒரு பகுதி தீக்குச்சிகள் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. தீப்பெட்டி ஆலையின் உரிமையாளர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்து.


சம்பவ இடத்திற்கு வந்த கழுகுமலை மற்றும் கோவில்பட்டி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இதில் பல லட்சம் மதிப்பிலான தீக்குச்சிகள் எரிந்து சேதமானது. இதுகுறித்து கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
CATEGORIES தூத்துக்குடி
