கோவில்பட்டி அருகே மானங்காத்தான் கிராம முஸ்லீம்கள் கயத்தார் காவல்நிலத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு உள்ள தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்துக்கு உள்பட்ட மானங்காத்தான் கிராமத்தில் முகமது ஜூம்மா பள்ளிவாசல் உள்ளது. இப்பகுதி முஸ்லீம்கள் ஆத்திகுளத்திலுள்ள அப்துல் ரகுமான் திடலில் வருகிற 10-ம் தேதி பக்ரீத் பண்டிகை தொழுகை ஏற்பாடு செய்தனர்.

அதன்படி கடந்த ஜூன் 18-ம் தேதி கயத்தார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சுப்புலட்சுமி தலைமையில் நடந்த கூட்டத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று திடலை இப்பகுதி முஸ்லீம்கள் சுத்தம் செய்தனர்.

கயத்தாறு காவல்துறையினர் சுத்தம் செய்வதை தடுத்து நிறுத்தியதாக தெரிகிறது. அதனால் இப்பகுதி முஸ்லீம் ஆண்களும், பெண்களும் ஜமாத் செயலாளர் சாகுல்ஹமீது தலைமையில் கயத்தாறு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இன்ஸ்பெக்டர் முத்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்படவே அனைவரும் கலைந்து சென்றனர்.இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
