கோவில்பட்டி அருகே மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து ரூபாய் 9.50 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம், பேவர் பிளாக் சாலை, மற்றும் வாறுகால் அமைக்கும் பணியை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே முடுக்குமீண்டாம்பட்டி ஊராட்சி உள்பட்ட துரைச்சாமிபுரத்தில் மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து ரூபாய் 9.50 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம், பேவர் பிளாக் சாலை, மற்றும் வாறுகால் அமைக்கும் பணியை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் கே ஆர் கல்லூரி நிறுவனர் அருணாச்சலம், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட குழு தலைவி சத்யா, ஒன்றியச் செயலாளர் அய்யாத்துரை பாண்டியன்,ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, ஒன்றிய விவசாய அணி செயலாளர் விஜயகுமார், வழக்கறிஞர் அணி சங்கர் கணேஷ், முன்னாள் ஒன்றிய செயலாளர் போர்டு சாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, வேல்ராஜ்,முருகன், மனோகரன், பழனிமுருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.