BREAKING NEWS

கோவில்பட்டி அருகே ஸ்ரீ நாச்சியம்மன் அம்மன் ஸ்ரீ உச்சிமாகாளி அம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

கோவில்பட்டி அருகே ஸ்ரீ நாச்சியம்மன் அம்மன் ஸ்ரீ உச்சிமாகாளி அம்மன் திருக்கோயிலில்  மகா கும்பாபிஷேக விழா

கோவில்பட்டி அருகே ஸ்ரீ நாச்சியம்மன் அம்மன் ஸ்ரீ உச்சிமாகாளி அம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வில்லிசேரி கிராமத்தில் உள்ள கம்மவார் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ நாச்சியம்மன் அம்மன் ஶ்ரீ உச்சிமாகாளி அம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.மேளதாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருக்கோவில் பிரகாரம் வழியாக எடுத்து வந்து கோபுர கலசத்துக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மூலஸ்தானத்தில் 21 அபிஷேக சிறப்பு பூஜைகள், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

நிகழ்ச்சியில் அம்மா பேரவை மாவட்ட இணைச் செயலாளர் நீலகண்டன்,ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கிருபாகரன்,முன்னாள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், முருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )