கோவில்பட்டி ஆதன் சுற்றுவட்டாரப் பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழை.

கோவில்பட்டி ஆதன் சுற்றுவட்டாரப் பகுதியில் வெளுத்து வாங்கிய கனமழை
தூத்துக்குடி மாவட்டம்
கோவில்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது மேலும் காலை நேரத்தில் வெயிலின் தாக்கமும் மாலை நேரத்தில் மிதமான மலையும் பெய்து வருகிறது இந்நிலையில் இன்று காலையில் வெயிலின் தாக்கம் அதிகமான காணப்பட்டது.
பின்னர் மாலையில் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசியது பின்னர் பரவலாக பெய்த மழை திடீரென கனமழையாக வெளுத்து வாங்கியது இந்த மழையின் காரணமாக கோவில்பட்டி பிரதான சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடிய இளையரசனேந்தல் ரயில்வே தரப்பாலத்தில்
மழை நீர் தேங்கியது புது ரோடு ஆகிய பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்தது இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
CATEGORIES தூத்துக்குடி