BREAKING NEWS

கோவில்பட்டி கதிரேசன் சாலையிலுள்ள ஆர்த்தி ஸ்கேன் நிறுவனம் உரிமையாளர் கோவிந்தராஜ், கோமதிஇல்லத்தில் 10 மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டி கதிரேசன் சாலையிலுள்ள ஆர்த்தி ஸ்கேன் நிறுவனம் உரிமையாளர் கோவிந்தராஜ், கோமதிஇல்லத்தில் 10  மேற்பட்ட  வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் 25 க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்ட ஆர்த்தி ஸ்கேன் நிறுவனங்களில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வருமான வரித்துறையினர் சோதனை இன்று காலை முதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஆர்த்தி மருத்துவமனை, ஆர்த்தி ஸ்கேன், மற்றும் கதிரேசன் கோவில் தெருவில் உள்ள ஆர்த்தி நிறுவன உரிமையாளர் கோவிந்தராஜன் மற்றும் அவரது மனைவி கோமதி வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் 6 குழுக்களாகப் பிரிந்து சோதனை நடத்தி வரும் நிலையில் அவரது இல்லத்தில் பத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் தற்போது தீவிர சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )