கோவில்பட்டி கந்து வட்டிக்கு பணம் கொடுத்த காவலர் மனைவி – பாதிக்கப்பட்ட பெண்ணை போலீசார் கைது செய்து வைத்துள்ள நிலையில் அவரை விடுவிக்க கோரி பிரவீனாவின் குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர் தீக்குளிக்கும் முயன்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரை சேர்ந்த பிரவீனா என்பவர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த காவலர் நாராயணசாமி என்பவரிடம் வட்டிக்குப் கடன் வாங்கி உள்ளார். இந்நிலையில் அதிக அளவில் பணம் கேட்டு கலவர் நாராயணசாமி மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பிரவீனா வழக்கறிஞர் அய்யலு சாமி என்பவர் மூலம் விருதுநகர் மாவட்ட காவல்துறையில் புகார் அளித்துள்ளார் இதனிடையே காவலர் நாராயணசாமி தூண்டுதலின் பேரில் விருதுநகர் மாவட்ட போலீசார் பிரவீனாவை கடம்பூரில் இருந்து நேற்று இரவு விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று எங்கு தங்க வைத்துள்ளனர்.

என்பது தெரியாது நிலை உள்ளது ஆகவே பாதிக்கப்பட்டுள்ள பிரவீனாவை விடுவிக்க கோரியும் பிரவீனாவின் தாய் மகேஸ்வரி பிரவீனாவின் வழக்கறிஞர் அய்யலுசாமி ஆகியோர் இன்று கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உடனடியாக போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
