BREAKING NEWS

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 10 அம்ச கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 10 அம்ச கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

 

 

தமிழக முதலமைச்சர் வேண்டுகோள் படி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் பொதுமக்களுக்குத் தேவையான முக்கிய திட்டப்பணிகளை நிறைவேற்றுவது குறித்து.,

கோவில்பட்டியைத் தலைமையிடமாக
கொண்டு புதிய மாவட்டம் அமைத்திட வேண்டுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில்
சட்டமன்ற தொகுதிகள் -6 பாராளுமன்ற தொகுதி

வட்டங்கள் (தாலுகா) -1 -10 கோட்டம் (RDOஅலுவலகம்) -3

புதிதாக விளாத்திகுளத்தில் கோட்டம் உருவாக்கிட வேண்டும்.

தென்காசியில் உள்ள திருவேங்கடம் தாலுகாவில் உள்ள 20-க்கு

கோவில்பட்டியைச் சுற்றி சுமார்
10 கி.மீ தொலைவிலேயே மேற்பட்ட ஊராட்சிகளும், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா மற்றும் அருப்புக்கோட்டை தொகுதியில் உள்ள 20க்கு மேற்பட்ட ஊராட்சிகளும் ஊராட்சிக்கு அமைந்துள்ளது.

 

இவற்றையெல்லாம் இணைத்து புதிதாக ஒரு மாவட்டம் கோவில்பட்டியை தலைநகராகக் கொண்டு அமைக்கப்பட்டால் சுமார் 20 லட்சம் மக்களுக்கு நல்ல நிர்வாக வசதி கிடைக்கும் வாய்ப்புள்ளது.

 

கோவில்பட்டி நகரின் பிரதான சாலையில் இருந்த சுமார் 70 ஆண்டுகால நீரோடை ஆக்கிரமிப்பு கடைகள் பொதுநலன் கருதி, வெள்ள பாதிப்புகளை தடுத்திடும் நோக்கில் நீதிமன்ற உத்தரவை பெற்று நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் கடந்த 2020 அன்று அகற்றப்பட்டன.

 

தற்போது இந்த நீரோடையானது நகரின் மையப்பகுதியில் பிரதான சாலைக்கு அருகிலேயே இருப்பதால் பாதுகாப்பு கருதி ஓடையின் இருபுறங்களிலும் தடுப்புச்சுவர் அமைத்தல்..

 

கோவில்பட்டியில் அரசு செவிலியர் கல்லூரி அமைத்தல்: அரசு செவிலியர் கல்லூரிக்கு இடம் கையகப்படுத்தப்பட்டு நிதி ஒப்புதல் வரை பெறப்பட்டுள்ளது. எனவே அரசு விரைவாக செவிலியர் கல்லூரியை செயல்படுத்தவேண்டும்.

 

எலுமிச்சை குளிர்சாதன கிடங்கு : எலுமிச்சை குளிர்சாதன கிடங்கு திருநெல்வேலி – கயத்தார் தேசிய நெடுஞ்சாலையில் வில்லிசேரி கிராமத்தில் அமைக்கப்பட வேண்டும். கயத்தாரில் தீயணைப்பு நிலையம்: 7).

கோவில்பட்டி தொகுதி கயத்தாரில் புதிய தீயணைப்பு நிலையம்

ரூ. 1.4 கோடி மதிப்பில் அமைக்கப்படும் என .2020அன்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை விரைந்து செயல்படுத்தி

கயத்தாரில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டும்.

 

கயத்தார் தாலுகா மருத்துவமனை:
கயத்தார் பகுதியை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகாவானது 2016 அன்று ரூ. 2.7 கோடி மதிப்பிலான புதிய கட்டிடத்துடன் அறிவிக்கபட்டு செயல்பட்டு வருகிறது. எனவே கயத்தார் ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.

 

தனி குடிநீர் திட்டம் கீழ்கண்ட
1. இனாம்மணியாச்சி 2.இலுப்பையூரணி
3.பாண்டவர்மங்கலம்
4.நாலாட்டின்புதூர்
5.திட்டங்குளம்

மந்தித்தோப்பு ஒவ்வொரு ஊராட்சியிலும் 10,000/-க்கு மேற்பட்ட மக்கள் தொகை உள்ள பகுதிகள் இங்கு குடிநீர் பிரச்சனையை நிரந்தரமாக தீர்த்திட தனி குடிநீர் திட்டம் அமைப்பது அவசியமானது.

 

கோவில்பட்டியில் ஒருங்கினைந்த நீதிமன்ற வளாகம் அமைத்தல். மற்றும் அரசு விருந்தினர் மாளிகையும் அமைக்கப்பட வேண்டும். என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜிடம் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கோரிக்கை மனுவை வழங்கினார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )