கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜ் 120 வது பிறந்தநாள் விழாவை காமராஜ்ரின் திரு உருவ படத்துக்கு அதிமுக நகர கழக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜ் 120 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா, தலைமையில் நகர அதிமுக சார்பில் நகரச் செயலாளர் விஜய பாண்டியன் முன்னிலையில் காமராஜ்ரின் திரு உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி, பாண்டியனார் மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் சீனி நாடார், மாநில எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் சீனி ராஜ், ஒன்றிய செயலாளர்கள் அய்யா துரை பாண்டியன், வண்டான கருப்பசாமி, அன்புராஜ், அம்மா பேரவை மாவட்ட பொருளாளர் வேலுமணி, அம்மா பேரவை நகர செயலாளர் ஆபிராம் அய்யாதுரை, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர், நகர மன்ற உறுப்பினர் வள்ளியம்மாள் மாரியப்பன்,மாவட்ட மாணவரணி தலைவர் செல்வகுமார், வழக்கறிஞர் சங்கர் கணேஷ், முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன்,மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, கழக பேச்சாளர் பெருமாள் சாமி, கிளைச் செயலாளர் அங்குசாமி, உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மனோகரன், பழனி குமார், விநாயகம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு காமராஜ் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்,

இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி மெயின் ரோடு சாலையில் அமைந்துள்ள பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜ் திருவுருவ சிலைக்கு பாண்டியனார் மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் சீனி நாடார், தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜ் 120 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கோவில்பட்டி மெயின் ரோடு சாலையில் அமைந்துள்ள பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜ் திருவுருவ சிலைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நகரத் தலைவர் ராஜகோபால் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
