BREAKING NEWS

கோவில்பட்டி செயற்கை புல் வெளி மைதானத்தில் 12-வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டிகள் தொடக்கம்

கோவில்பட்டி செயற்கை புல் வெளி மைதானத்தில் 12-வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டிகள் தொடக்கம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி மைதானத்தில் 12-வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டிகள் இன்று தொடங்கின.காலை 6.30 மணிக்கு தொடங்கிய முதல் போட்டியில் ஹாக்கி பீகார் அணியும், அசாம் ஹாக்கி அணியும் மோதின. இதில், 11 – 1 என்ற கோல் கணக்கில் பீகார் அணி வெற்றி பெற்றது. இதில், மோனோகுமார் சிறந்த ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்டார்.

காலை 8.15 மணிக்கு நடந்த 2-வது ஆட்டத்தில் ஹாக்கி ஜம்மு காஷ்மீர் அணி, ஹாக்கி அருணாசலபிரதேசம் அணியுடம் மோதியது. இதில், 5 – 0 என்ற கோல் கணக்கில் அருணாசலபிரதேசம் அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் அருணாசலபிரதேசத்தை சேர்ந்த லவ்பிரீத் சிங் சிறந்த ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்டார். காலை 10 மணிக்கு நடந்த 3-வது ஆட்டத்தில் கோன்ஸ் ஹாக்கி அணியும், ஹாக்கி ஜார்கண்ட் அணியும் மோதின. இதில், 10 – 0 என்ற கோல் கணக்கில் ஜார்கண்ட் அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில், ஆசிம் டர்கீ சிறந்த ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்டார்.

மாலையில் தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடந்தன. இதன் ஒரு பகுதியாக கலைநிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள ஹாக்கி வீரர்களின் அணிவகுப்பு ஆகியவை நடந்தன. தொடர்ந்து நடந்த விழாவுக்கு கனிமொழி எம்.பி. தலைமை வகித்து ஹாக்கி போட்டிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பெ. கீதாஜீவன், சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன், 12-வது தேசிய ஜூனியர் ஹாக்கி போட்டி ஒருங்கிணைப்பு குழு துணைத் தலைவர் கே.ஆர்.அருணாசலம், ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவர் சேகர் ஜெ. மனோகரன், நகர்மன்றத் தலைவர் கா.கருணாநிதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாலையில் நடந்த முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு ஹாக்கி அணியும் சத்தீஸ்கர் ஹாக்கி அணியும் மோதின. இதில், 3 – 1 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது.தொடர்ந்து நடந்த 2-வது போட்டியில் ஹாக்கி ஹரியானா அணியும் கேரளா ஹாக்கி அணியும் மோதின.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )