கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து- பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 9 ஆவது தெருவில் சுந்தர்ராஜ் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலையில் இருந்து இன்று காலையில் புகை எழுந்துள்ளது. இதைகண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சிறிது நேரத்தில் அங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டு புகை மண்டலமாக காட்சியளித்தது.
இதையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜ் தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.




இருப்பினும், ஆலையில் இருந்த தீக்குச்சிகள் எந்திரம் மற்றும் மின்சாரம் பொருட்கள் கட்டிடம் உள்ளிட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமாகின. இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
CATEGORIES தூத்துக்குடி
TAGS கோவில்பட்டிகோவில்பட்டி தீயணைப்பு நிலையம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திடீர் தீ விபத்துதீ விபத்துதீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்துதூத்துக்குடி மாவட்டம்வீரவாஞ்சி நகர்
