கோவில்பட்டி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி பாரதிநகர் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் பள்ளி தலைமை ஆசிரியர் தேவராணி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர், நகராட்சி 32வது வார்டு நகர மன்ற உறுப்பினர் கவியரசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்கான 9 தீர்மானங்களை ஆசிரியை பிளசிங் காருண்யா வாசித்தார், அதனை தொடர்ந்து 9 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.
ஆசிரியை ஸ்ரீதேவி நன்றி உரையாற்றினார், இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES தூத்துக்குடி