கோவில்பட்டி பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழை..!!
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக மாலையில் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் இருந்து வந்தது பின்னர் மாலையில் மேகமூட்டத்துடன் காணப்பட்டது பின்னர் திடீரென பெய்த சாரல்..
மழை பின்னர் கனமழையாக ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது மழையின் கோவில்பட்டி முக்கிய நகர் பகுதியில் உள்ள சாலைகளில் மழைநீர் வெல்லம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
பஸ் நிலையம் அருகே மழை நீரில் சாக்கடை நீரும் கலந்து சென்றதால் அவ்வழியாக சென்று பொதுமக்கள் மிகவும் சிரமத்துடன் அவ்வழியாக கடந்து சென்றனர் வாகன ஓட்டியின் சிரமத்துடன் அவ்வழியாக கடந்து சென்றனர்.
இதே போல் கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதியா ன திட்டங்குளம், பாண்டவர்மங்கலம், மணியாச்சி, நாலாட்டின்புத்தூர், ஆகிய பகுதியில் பரவலாக மழை பெய்தது.