BREAKING NEWS

கோவில்பட்டி பகுதியில் பருவமழை இல்லாததால் மிளகாய் செடிகள் காய்ந்து கருகி வருவதால் விவசாயிகள் வேதனை.

கோவில்பட்டி பகுதியில் பருவமழை இல்லாததால் மிளகாய் செடிகள் காய்ந்து கருகி வருவதால் விவசாயிகள் வேதனை.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் அதன் சுற்றுவட்டார பகுதியில் முழுவதும் மானாவாரி விவசாயம் நடைபெற்று வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் பருவ மழையை நம்பியே விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

கொரோனா காலகட்டத்திற்கு பின்னர் கடந்த ஆண்டு வழக்கம் போல் விவசாயிகள் விவசாய பணிகள் ஈடுபட்டனர். இதில் சில பகுதிகளில் விவசாயிகளுக்கு சிறிதளவு நஷ்டமும் பல பகுதிகளில் விளைச்சல் எதுவுமின்றி விவசாயிகள் கவலையடைந்தனா்.

 

இருப்பினுமா இந்த ஆண்டும் பருவ மழையை நம்பி விளாத்திகுளம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் கம்பு, வெள்ளை சோளம், சிகப்பு சோளம், வெங்காயம், மிளகாய் உள்ளிட்டவை பயிரிட்டுள்ளனர்.

 

 

இதில் அதிக அளவில் மிளகாய் பயிரிட்டு இருந்தனர் பயிரிடும் நேரத்தில் சிறிதளவு மழை பெய்தும் பயிர்கள் வளர்ச்சி காலத்தில் பருவமழை எதுவும் இல்லாததால் பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

கடந்த புரட்டாசி மாதம் மக்காச்சோளம்,சோளம்,கம்பு, உளுந்து ஆகியவை பயிரிடப்பட்டது. இதில் ஐப்பசி மாதம் விதைக்கப்பட்ட மிளகாய் செடிகள் தற்போது பருவமழை இல்லாமல் வெயிலில் காய்ந்து கருகி வருகிறது.

 

 

செடியில் காய்த்த காய்களும் போதிய சத்து இல்லாமல் செடியிலிருந்து உதிர்ந்து வருகிறது. அடுத்த பருவத்திற்கு விவசாயம் செய்ய போதிய பணமில்லாமல் சிரமப்படுவதாகவும் பயிர் காப்பீடு தொகையை விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் எனவும் மேலும் இது வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும் எனவும் அப்பகுதி விவசாய கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

CATEGORIES
TAGS